இந்தியா

Posted by maanamulathamilan On Categories:

மக்களவையில் மன்மோகன் - அத்வானி காரசார வாக்குவாதம்

நாடாளுமன்றத்தில் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கும் இடையே காரசார வாக்குவாதம் நடைபெற்றது. 

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அத்வானி, பாகிஸ்தானுடன் இந்தியா அண்மையில் நடத்திய அயலுறவுத் துறைச் செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்காவின் நிர்ப்பந்தமே காரணம் என்று குற்றம்சாற்றினார். 

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்று இந்தியா மேற்கொண்ட முடிவின் பின்னணியில் அமெரிக்கா இருந்ததாக கூறிய அத்வானி, காஷ்மீர் பிரச்னையை தீர்க்க முயற்சிப்பேன் என்று ஒபாமா அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசியதை சுட்டிக்காட்டினார்.

அத்வானியின் இந்த குற்றச்சாற்றை இரண்டு முறை குறுக்கிட்டு மறுத்த பிரதமர் மன்மோகன் சிங், பராக் ஒபாமா அதிபராக பதவியேற்ற பின்னர் இந்தியா - பாகிஸ்தான் உறவுகள் குறித்த அமெரிக்க கொள்கைகளில் மாற்றம் எதுவும் இல்லை என்றார். 

இந்த விடயத்தில் ஒபாமாவைப் பற்றிய அத்வானியின் கருத்து சரியாதல்ல என்றும் பிரதமர் தெரிவித்தார்.அப்போது இருவருக்கும் இடையா சிறிது நேரம் காரசார வாக்குவாதம் ஏற்பட்டது.





இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதத்தை பாக். கட்டுப்படுத்த வேண்டும்: பிரதீபா  


இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளை பாகிஸ்தான் கட்டுப்படுத்தினால், பாகிஸ்தானுடன் அர்த்தமுள்ள உறவை உருவாக்க இந்தியா தயாராக உள்ளது என குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தெரிவித்துள்ளார். 

இன்று துவங்கிய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பேசிய பிரதீபா பாட்டீல், “பயங்கரவாதத்தால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொள்வதுடன், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தால், அந்நாட்டுடன் இந்தியா அர்த்தமுள்ள உறவை ஏற்படுத்திக் கொள்ள தயாராக உள்ளத” என்றார்.

இந்தியா-பாகிஸ்தான் அயலுறவுச் செயலர்கள் அளவிலான இருதரப்பு பேச்சுவார்த்தை வரும் 25ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் பிரதீபா தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியப் பணத்தை மீட்போம்: இதேபோல் சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் வைத்துள்ள கணக்குகளில் உள்ள பணம் குறித்த தகவல்களை பெற மத்திய அரசு முயன்று வருவதாகவும், இதற்காக சம்பந்தப்பட்ட அரசுகளுடன் தேவையான ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்ள இந்திய வருமான வரிச் சட்டங்களில் தேவையான திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் நிச்சயதார்த்தம்



இன்று மாலை சென்னை அடையாறு பார்க் ஓட்டலில் நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் சவுந்தர்யாவின் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. நடிகர், நடிகைகள் பங்கேற்கிறார்கள்.
ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா. முதல் மகள் ஐஸ்வர்யாவை தனுஷ் திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சவுந்தர்யா “சுல்தான் தி வாரியர்” அனிமேஷன் படத்தை ரஜினியை வைத்து இயக்கி வருகிறார். சமீபத்தில் ரிலீசான “கோவா” படத்துக்கு இவரதான் தயாரிப்பாளர்.

சவுந்தர்யாவுக்கு திருமணம் முடிவாகி உள்ளது. மணமகன் பெயர் அஸ்வின். சென்னை யில் உள்ள பிரபல கட்டு மான நிறுவன உரிமையாளர் ராம்குமாரின் மகன். கோவா படப்பிடிப்பு பகுதிகளில் அஸ்வினை அடிக்கடி காண முடிந்தது.

அதன் பிறகுதான் இருவரும் காதலிக்கும் விஷயம் வெளியே தெரிய வந்தது. ரஜினியிடம் அஸ்வினை அறிமுகம் செய்தார். அவருக்கும் பிடித் துப்போனது. இதையடுத்து திருமணம் நிச்சயதார்த்தம் செய்ய முடிவு செய்தனர்.

முதல்-அமைச்சர் கருணாநிதி, முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மற்றும் நடிகர், நடிகைகள், நெருங்கிய, உறவி னர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தனர்.

சென்னை அடையாறு பார்க் ஓட்டலில் இன்று மாலை திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. நடிகர், நடிகைகள் பங்கேற்கிறார்கள்.

சுல்தான் தி வாரியார் படம் ரிலீசானதும் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமண தேதி இன்று முடிவு செய்யப்படுகிறது.


ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மீதான தடையை நீக்கினார் பால் தாக்கரே



ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவில் விளையாட அனுமதிக்க மாட்டோம் என்று கூறிய பால்தாக்ரே நேற்று இதை வாபஸ் பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்களை விளையாட அனுமதிக்க மாட்டோம் என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த தடையை அவர் நேற்றிரவு திடீரென வாபஸ் பெற்றார். இது குறித்து அவர் கூறுகையில், `தேசிய நலனுக்கு ஆதரவாக பேசுவது மிகப்பெரிய குற்றமாக கருதப்படுகிறது. அவ்வாறு இருக்கையில் நாங்கள் ஏன் ஆஸ்திரேலிய வீரர்களையோ, ஐ.பி.எல். கிரிக்கெட்டையோ எதிர்க்கவேண்டும்?' என்று விரக்தியாக பதில் அளித்தார்.

இதன் மூலம் ஆஸ்திரேலிய வீரர்கள் மீதான தடையை அவர் மறைமுகமாக வாபஸ் பெற்றார்.