சினிமா

Posted by maanamulathamilan On Categories:

த்‌ரிஷாவுக்குப் பதில் ஸ்ரேயா
ரவி தேஜா, நயன்தாரா நடித்த துபாய் சீனு ஆந்திராவில் பெ‌ரிய வெற்றியைப் பெற்றது. நயன்தாரா நடித்திருந்ததால் இந்தப் படத்தை துபாய் ராணி என்ற பெய‌ரில் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டனர். படம் ரொம்ப சுமாராகவே போனது.

தெலுங்கில் ரவி தேஜா டான் சீனு என்ற படத்தில் நடிக்கிறார். துபாய் சீனுவுக்கு கிடைத்த வெற்றியை மனதில் வைத்து டான் சீனுவை உருவாக்குகிறார்கள். 

இந்தப் படத்தில் நடிக்க முதலில் த்‌ரிஷாவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது. அவர் இந்தி, தமிழ் என்று பிஸியாக இருப்பதால் கால்ஷீட் இல்லையென கைவி‌ரிக்க ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். 

தெலுங்கில் பல வருடங்களாக ஸ்ரேயா நடிக்கவில்லை. இப்போதுதான் புலி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். அந்த ராசியா தெ‌ரியவில்லை ரவி தேஜாவின் ஜோடியாகியிருக்கிறார். தமிழிலும் டான் சீனுவை எதிர்பார்க்கலாம்.

மாத்தியோசி

ஒரு கல்லூரியின் கதை படத்தை இயக்கிய நந்தா பெ‌ரியசாமியின் புதிய படம், மாத்தியோசி. புதுமுகங்களுடன் ஷம்மு நடித்துள்ளார். 

webdunia photo
WD
மருந்துக்குக்கூட நல்ல விஷயங்கள் தெ‌ரியாத நான்கு கிராமத்து இளைஞர்கள் சின்னச் சின்ன தப்புகள் செய்கிறார்கள். கிராமத்தில் இனியும் இருக்க முடியாது என்ற நிலையில் சென்னைக்கு வருகிறார்கள். அங்கு அவர்கள் சந்திக்கும் சம்பவங்கள், பிரச்சனைகள், காதல் இவைதான் கதை.

நான்கு புதுமுகங்கள் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர். படத்தில் அவர்களின் பெயர்கள் பாண்டி, ஓணான், மங்கா, மா‌ி. இதில் பாண்டியாகஹ‌ரிஷ், ஓணானாக கோபால், மங்காவாக அலெக்ஸ், மா‌ரியாக லோகேஷ் நடித்துள்ளனர். இவர்களுடன் ஷம்முவும் நடித்துள்ளார்.

இயக்குனர் ரவிம‌ரியா பெண்மை கலந்த வேடத்தில் நடித்துள்ளார். இவர்தான் படத்தின் வில்லன். இவர்களுடன் இயக்குனர்கள் பொன்வண்ணன், ‌ஜி.எம்.குமார் ஆகியோரும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு விஜய் ஆம்ஸ்ட்ராங். குருகல்யாண் இசையமைத்துள்ளார். கோலா பாஸ்கர் எடிட்டிங், சண்டைப் பயிற்சி ஸ்பீடு சையத். 

பிஎஸ்எஸ்ஆர் பிலிம்ஸ் சார்பில் பி.எஸ்.சேகர் ரெட்டி தயா‌ரித்துள்ளார்.

ஜீவா ஜோடியாகும் ஸ்ரேயா


ஜீவாவின் கச்சே‌ரி ஆரம்பம் ‌ரிலீஸுக்கு தயாராக உள்ளது. சிங்கம் புலி படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு ரவுத்ரம் படத்தில் நடிப்பதாக இருந்தார் ‌‌ஜீவா. அதற்குள் கே.வி.ஆனந்தின் கோ குறுக்கிட ரவுத்ரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், ரவுத்ரத்தின் பூர்வாங்க வேலைகள் தொடங்கிவிட்டன. ‌ஜீவா ஜோடியாக ஸ்ரேயா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.

கந்தசாமி, ஜக்குபாய் படங்களில் ஸ்ரேயாவுக்கு நல்ல பெயர் கிடைத்தாலும் வாய்ப்பு மட்டும் வரவில்லை. ஆர்யாவுடன் நடித்துவரும் சிக்குபுக்கு மட்டுமே கையிலிருக்கும் ஒரே வாய்ப்பு. 

இந்நிலையில்தான் ‌‌ஜீவாவின் ரவுத்ரம் வாய்ப்பு ஸ்ரேயாவை தேடி வந்தது. கப்பென்று பிடித்தவர் வழக்கம் போல இந்தியில் பிஸி, தெலுங்கில் ஆறு படம் என்று புள்ளி விவரம் தருகிறார். நம்புவோம்.

நயன்தாராவின் சிம்பல்




பாலா படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மணிரத்னம் சொல்கிறார், “நான் இங்கு விருந்தினராக வரவில்லை, பாலாவின் ரசிகனாக வந்திருக்கிறேன்.” பாலுமகேந்திரா தனக்குப் பிடித்த உலகத் திரைப்படங்களில் ஒன்றாக பிதாமகனை குறிப்பிடுகிறார்.


WD
பாலாவுக்கு கிடைத்திருக்கும் தேசிய விருதைவிட மேலே உள்ள இரண்டு அங்கீகாரமும் முக்கியமானவை. பத்து வருடங்களுக்கு மேல் திரைத்துறையில் இயக்குனராக இருக்கும் பாலா இதுவரை நான்கு படங்கள் மட்டுமே இயக்கியிருக்கிறார். ஆனால், இந்த நான்கின் மூலம் அவர் சாதித்தவை அதிகம்.

பாலாவின் திரைப்படங்கள் கதையின் வலிமையால் முன்னகர்பவை அல்ல. கதாபாத்திரங்களின் தனித்தன்மையே காட்சிகளை நகர்த்துகின்றன. பாலா அளவுக்கு கதாபாத்திரங்களின் மீது ஆளுமை செலுத்தும் இயக்குனரை தமிழ் திரையுலகம் இதுவரை கண்டதில்லை எனலாம்.

கதாபாத்திரங்கள் என்று பன்மையாகச் சொன்னாலும் பிரதானமாக வரும் நாயகன் பாத்திரமே பாலா படங்களின் மையம். இந்த மைய கதாபாத்திரத்தில் ஒரு பொதுத்தன்மையை நாம் காணலாம். கடவுளுக்கு‌ரிய சுதந்திரமும், வலிமையும் உடையவர்கள் பாலாவின் நாயகர்கள். இவர்கள் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள். நந்தா படத்தின் நாயகன் அறியாத வயதில் தெ‌ரியாமல் செய்த கொலைக்காக சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் தனது பால்ய பருவத்தை கழிக்க நேர்ந்தவன். இயல்பாக கிடைக்க வேண்டிய தாய்ப் பாசம் கூட அவனுக்கு மறுக்கப்படுகிறது.

பிதாமகனில் வரும் சித்தனின் வாழ்க்கை அதைவிட ப‌ரிதாபகரமானது. சித்தனின் தாய் முகம் தெ‌ரியாத ஒருவனால் வஞ்சிக்கப்பட்டவள். அனாதையான அவள் சுடுகாட்டில் சித்தனை பெற்றெடுக்கிறாள். பிறந்த உடனேயே தாய் இறந்துபோக சித்தன் வெட்டியானால் வளர்க்கப்படுகிறான். சித்தனின் வாழ்க்கை பெரும் அவலச்சுவையாக சித்த‌ரிக்கப்படுகிறது.


WD
நான் கடவுளின் நாயகன் சிறு வயதில் தந்தையால் காசியில் அனாதையாக்கப்படுகிறான். சாமியார்கள், மந்திரங்கள், எ‌ரியும் பிணங்கள் என அவனது வாழ்க்கை திசைமாறிப் போகிறது.

சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட அல்லது வஞ்சிக்கப்பட்ட நாயகனின் சித்திரம் பார்வையாளர்கள் மனதில் ஒருவித குற்றவுணர்வை ஏற்படுத்துகிறது. நாயகன் எதி‌ரிகளின் மீது வன்முறையைச் செலுத்தும் போது இந்த குற்றவுணர்வே அவனுக்கான நியாயமாக மாறிவிடுகிறது. 

பேண்டஸி இயக்குனர்களின் படங்களில் நாயகனின் மகிழ்ச்சியான குடும்பம் சூறையாடப்படும் போதோ அல்லது கல்வி, நீதி போன்ற அடிப்படை உ‌ரிமைகள் மறுக்கப்படும் போதோ அவன் பழிவாங்கப் புறப்படுகிறான். பாலாவின் படங்கள் இவற்றிலிருந்து மாறுபட்டவை. தனித்தன்மை வாய்ந்த பாலாவின் நாயகர்கள் சமூகத்துடன் கலக்க முற்படும்போது ஏற்படும் முரண்களே அவர்களின் பாதையை மாற்றிப் போடுகிறது. மாறாக தனி மனித கோபமோ, சமூக நீதியின்பால் உள்ள தாகமோ அவர்களை இயக்குவதில்லை. 

இன்னும் எளிமையாகச் சொன்னால் பேண்டஸி இயக்குனர்களின் நாயகன் சமூக அவலங்களை தேடிப் போய் அழிப்பவன். நீதியின்பால் பசி தாகம் உள்ளவன். பாலாவின் நாயகர்களோ ரயிலைப் போன்றவர்கள். எதையும் தேடிப் போவதில்லை. தங்கள் வழியில் எதிர்படுபவைகளை அனாயாசமாக மோதி தூளாக்கிவிட்டுச் செல்கிறவர்கள். அதே நேரம் அவர்கள் மோதி தூளாக்குபவை சமூக சீர்கேடுகளின் மீதான பாலாவின் கோபத்தை பிரதிபலிப்பவையாக இருப்பதால் அவரது படங்களின் நாயகர்களும் நீதிக்காக போராடுகிறவர்களாகவே திரையில் தோற்றமளிக்கிறார்கள்.

இந்தி '3 இடியட்ஸ்' படம் ரீமேக் : அமீர்கான் வேடத்தில் விஜய்

'3 இடியட்ஸ்' படத்தை தமிழில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. ரீமேக் உரிமையை ஜெமினி பிலிம்சர்க்கியூட் நிறுவனம் பெரும் தொகை கொடுத்து வாங்கி இருக்கிறது.
இப்படத்தில் நடிக்க முன்னணி தமிழ் ஹீரோக்கள் பலர் ஆர்வம் காட்டுகிறார்கள். பாலாவின் “அவன் இவன்” படத்தில் விஷால், ஆர்யா என இரு கதாநாயகர்கள் சேர்ந்து நடிக்கின்றனர்.
அதுபோல் '3 இடியட்ஸ்' ரீமேக்கிலும் மூன்று கதாநாயகர்களில் ஒருவராக நடிக்க பலர் விரும்புகிறார்கள்.
அமீர்கான் வேடத்தில் விஜய் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மற்ற இரு ஹீரோக்கள் மற்றும் கதாநாயகி பரிசீலனையில் உள்ளனர். விஷ்ணுவர்த்தன் இயக்குவார் என்று கூறப்படுகிறது.





தமிழில் மீண்டும் அசின்



தமிழில் முன்னணி நடிகையாக இருந்த அசின் கடைசியாக நடித்த படம் 'தசாவதாரம்' 2007-ல் ரிலீசானது.
அதற்கு முன் 'எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி', 'கஜினி', 'வரலாறு', 'போக்கிரி', 'சிவகாசி' உள்பட ஏராளமான படங்களில் நடித்தார்.
2008-ல் கஜினியை இந்தியில் ரீமேக் செய்தனர். அதில் அமீர்கான் ஜோடியாக நடித்து இந்தி திரையுலகில் நுழைந்தார். அப்படம் வெற்றி அடைந்ததால் அசின் முன்னணி நடிகையாக உயர்ந்தார். 'லண்டன் டிரீம்ஸ்' படத்தில் சல்மான்கான் ஜோடியாக நடித்தார்.
தமிழ், தெலுங்கு பட வாய்ப்புகளை உதறினார். ஆனால் 'லண்டன் டிரீம்ஸ்' வெற்றி பெறாததால் அசின் மார்க்கெட் கவிழ்ந்தது. தற்போது மீண்டும் தமிழ் படங்களுக்கு வருகிறார்.
மலையாளத்தில் ஹிட்டான 'பாடி கார்ட்' படம் விஜய் நடிக்க தமிழில் ரீமேக் ஆகிறது. சித்திக் இயக்குகிறார். இதில் கதாநாயகியாக அசின் நடிக்கிறார். மார்ச்சில் படப்பிடிப்பு துவங்குகிறது.
சூர்யாவை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்துக்கும் அசினை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடக்கின்றன. விஜய்யை வைத்து ஜெயம் ராஜா இயக்கும் படத்தில் நடிக்கவும் அசினிடம் பேசி வருகின்றனர். சிம்புவும் அசினை சந்தித்து தனது “வாலிபன்” படத்தில் நடிக்க அழைத்துள்ளாராம். தமிழில் 4 புதுப்படங்கள் அசினுக்கு வந்துள்ளன.




பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!



நடிகர் அஜித் இனி தனது பெயருக்கு முன்னால் அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டத்தை பயன்படுத்த மாட்டேன் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
இதுபற்றி அவர் அளித்த பேட்டியில், ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் எவ்வளவோ மாற்றங்கள் வரும். இன்றைக்கு இருக்கிற சினிமா ரசிகர்கள் ரொம்பவே மாறியிருக்கிறார்கள். அதனால்தான் இனிமேலும் அல்டிமேட் ஸ்டார் பட்டம் போட்டுக்கணுமா?னு யோசி்ச்சேன். வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன், என்று தெரிவித்தார். அவரைப் போலவே தனுஷூம் பெயருக்கு முன்னால் பட்டம் போடுவதை விரும்பவில்லை, என்று ஏற்கனவே கூறியிருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் பரத் இந்த பட்ட விவகாரம் குறித்த தனது கருத்தை கூறியிருக்கிறார். முன்னணி ஹீரோக்கள் போல நீங்களும் உங்கள் பட்டத்தை விட்டு விடுவீர்களா? என்று அவரிடம் கேட்டதற்கு, முன்னணி ஹீரோக்களையே உசுப்பி விடும் அளவுக்கு பதில் அளித்துள்ளார்.
நீங்கள் குறிப்பிடும் ஹீரோக்களுக்கு யார் அந்த பட்டங்களை கொடுத்தார்கள். ஏன் இப்போது அதை போடத் தயங்குகிறார்கள் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு ரசிகர்கள் அன்போடு கொடுத்த சின்னத் தளபதி பட்டத்தை அடுத்தடுத்து ஒவ்வொரு படத்திலும் பயன்படுத்துவது நிச்சயம். நோ காம்ப்ரமைஸ், என்று கூறுகிறார் பரத்!.