sarath_fonseka16 ஜெனரல் சரத்பொன்சேகா தமது மருமகன் தனுன திலகரட்ன பணியாற்றிய ஹய்கொப் நிறுவனத்தினூடாக கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்கள் தொடர்பாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இது தொடர்பான வாக்குமூலங்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்ததாக குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்று கொழும்பு நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளனர்.

தனுனவின் ஆயுதக்கொள்வனவு தொடர்பான நான்கு கேள்விப்பத்திரங்களுக்கு கேள்விபத்திரசபையின் தலைவராக செயற்பட்ட போது தாம் அனுமதி வழங்கியது தொடர்பாகவே சரத்பொன்சேகாவின் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

எனினும் அவர் இந்த வாக்குமூலத்தில் பிரிட்டிஷ் போனியோ பாதுகாப்பு நிறுவனம் மற்றும் ஹய்கோப் நிறுவனம் தொடர்பில் தாம் அறிந்திருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத்துறையினர் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்த நான்கு கேள்விப்பத்திரங்கள் தொடர்பாக அனுமதி வழங்கப்பட்ட போது அதற்காக தொழில்நுட்ப மறுமதிப்பீட்டு சபையின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் சரத் பொன்சேகா தமது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

தனுன திலகரட்ன இலங்கை ராணுவத்திற்கு தமது ஹய்கோப் நிறுவனத்தினூடாக பெற்றுக்கொடுத்ததாக கூறப்படும் துப்பாக்கி ரவைகள் மற்றும் ஆயுதங்களின் மூலம் பெருமளவான தரகுப்பணத்தை பெற்றுக்கொண்டதாக குற்றம்சுமத்தப்பட்டு;ள்ளது.
இந்த குற்றத்திற்கான தனுன திலகரட்னவிற்கு நீதிமன்றத்தில் பிடிவிராந்தும் பிறப்பிக்கப்பட்டுள்ளது
.